ரயிலில் கர்ப்பிணிக்கு தொல்லை: இபிஎஸ் கண்டனம்

72பார்த்தது
ரயிலில் கர்ப்பிணிக்கு தொல்லை: இபிஎஸ் கண்டனம்
ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அவரது அறிக்கையில், கோவை-திருப்பதி இடையே சென்றுக்கொண்டிருந்த ரயிலில், கர்ப்பிணிக்கு இருவர் பாலியல் தொல்லை அளித்ததோடு, கீழே தள்ளிவிட்டதாக வரும் செய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது. திமுக அரசு பெண்களின் பாதுகாப்பில் கடுகளவு கூட கவனம் செலுத்தாததன் நீட்சியே இத்தகைய கொடுமைகள் தொடர்வதற்கு காரணம் என விமர்சித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி