தாய் கண்டித்ததால் 7ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை

65பார்த்தது
தாய் கண்டித்ததால் 7ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை
திருச்சி-மதுரை ரோடு நத்தர்ஷா பள்ளிவாசல் பகுதியைச் சேர்ந்தவர் சையது பசுலுதீன் ரஹ்மான். இவரது மகன் சையது இஸ்மாயில்(12). இவர் தனியார் பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று இவர் படிக்காமல் விளையாடிக் கொண்டிருந்ததாகவும், இதனால் அவரை அவரது தாய் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சையது இஸ்மாயில் தனது தாயின் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி