திருநெல்வேலியில் சுமார் ரூ.1,679 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். பின்னர் அவர் நெல்லைக்கு 2 புதிய சிப்காட் தொழிற்பூங்காக்கள், புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்ட பல திட்டங்களை அறிவித்தார். தொடர்ந்து பேசிய முதலமைச்சர், திருநெல்வேலி அல்வா உலக பேமஸ். ஆனால் தற்போது மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு தரும் அல்வா தான் அதைவிட பேமஸாக உள்ளது. தமிழகத்தில் ஏற்பட்ட மழை பாதிப்புகளுக்கு உரிய நிதியை அளிக்கவில்லை என்றார்.