வேலைக்குப் போகக் கூறியவர் மீது தாக்குதல்

1076பார்த்தது
வேலைக்குப் போகக் கூறியவர் மீது தாக்குதல்
கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொன்மனை மங்கலம் பகுதியை சார்ந்தவர் முத்துப்பிள்ளை. இவர் மரம் வெட்டும் தொழில் செய்து வருகிறார். இவர் வேலைக்கு செல்வதற்காக குலசேகரம் அருகே புளியமூடு பகுதியில் நின்றபோது அங்கே வந்த உடையன்பரம்புவிளை பகுதியை சார்ந்த அனீஸ் தனக்கு மது அருந்துவதற்கு பணம் கொடுக்குமாறு கேட்டுள்ளார். உழைத்து சம்பாதித்த பணத்தில் மது அருந்து என்னிடம் கேட்காதே என முத்துப்பிள்ளை கூறவே ஆத்திரமடைந்த அனீஸ் முத்துப்பிள்ளையை கடுமையாக தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த முத்துப்பிள்ளை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து குலசேகரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி