கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவட்டார் பேரூராட்சி கொக்கோட்டுமூலை பகுதியில் பாஜக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு கிளைத் தலைவர் சிவபிரசாத் தலைமை தாங்கினார். சக்தி கேந்திர பொறுப்பாளர் சதாசிவன் முன்னிலை வகித்தார். ஒன்றிய அமைப்பு சாரா தொழிலாளர் பிரிவு துணைத் தலைவர் தங்கப்பன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். கூட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வேட்பாளரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய தொடர்ந்து உழைப்பதென முடிவு செய்யப்பட்டது.