கன்னியாகுமரி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் அழகு மீனா தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கேரளாவிற்கு கனிம வளங்கள் கடத்துவதை தடுத்தல், முறைகேடாக இயங்கும் கல்குவாரிகளை அகற்றுதல் உள்ளிட்ட விவசாயிகளின் நலனுக்கான பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை நாம் தமிழர் கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் நேற்று அளித்தனர்.