கன்னியாகுமரி மாவட்டம் கடியப்பட்டணத்தை சேர்ந்தவர் ஆல்பர்ட்சுனேஷ். இவரது மனைவி ஸ்னோஷா(29). இவர் நேற்று கடியப்பட்டிணத்தில் இருந்து நாகர்கோவில் செல்லும் பஸ்சில் ஏறி அண்ணா பஸ் ஸ்டாண்டில் இறங்கியவர் கையில் வைத்திருந்த பணப்பை காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் பர்ஸில் 18 ஆயிரம் ரூபாய் இருந்தது என்று கூறி அழுதார். இதனையடுத்து பஸ்ஸை கோட்டாறு போலீஸ் ஸ்டேஷன் பஸ் டிரைவர் கொண்டு சென்றார். போலீசார் விசாரணை நடத்தினார்கள்.