மணக்குடியில் புதிய சமூக நலக்கூடம்.

53பார்த்தது
கலப்பை மக்கள் இயக்க நிறுவன தலைவரும், சினிமா பட தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரான பி. டி. செல்வகுமார் தனது சொந்த செலவில் மணக்குடி பகுதியில் சமுதாய நலக்கூடம், கலையரங்கத்துடன் கூடிய விளையாட்டு திடலை மக்களுக்கு கட்டிக் கொடுத்தார். இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மணக்குடி பங்குத்தந்தை அந்தோணியப்பன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ரெம்ஜியூஸ் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக நடிகர் இமான் அண்ணாச்சி கலந்து கொண்டார். விழாவில் புதிய சமுதாய நலக்கூடம் மற்றும் கலை யரங்கத்துடன் கூடிய விளையாட்டு திடலை கலப்பை மக்கள் இயக்க நிறுவன தலைவர் பி. டி. செல்வகுமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தொடர்ந்து அவர் பேசும் போது, 'இளைஞர்கள் நாட்டின் முதுகெலும்பு. அவர்கள் என்றென்றைக்கும் தவறான பாதைக்கு சென்று விடக்கூடாது. மக்களின் வளர்ச்சிக்காக மேலும் நலத்திட்டங்களை வழங்குவேன்' என்றார். நிகழ்ச்சியில் கலப்பை மக்கள் இயக்கம் மாநில பேச்சாளர் தாணுலிங்கம், மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன், மற்றும் பங்கு
பேரவை நிர்வாகிகள், பங்கு
மக்கள் உள்பட பலர் கலந்து
கொண்டார்கள். நிகழ்ச்சியில்
முன்னதாக சிறுவர், சிறுமிகளின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் கால்பந்து போட்டிகள்
நடத்தப்பட்டது. போட்டியில் வெற்றி பெற்றவர்கள் மற்றும் பங்கேற்ற அனைவருக்கும் கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி