நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட 7வது வார்டு ஹிந்து வித்யா பள்ளி அருகேயுள்ள தெருவில் பள்ளிக்குச் சென்ற மாணவியை தெரு நாய் துரத்தியுள்ளது. இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது, இச்சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக சாலைகளில் சுற்றித் திரிகின்ற தெருநாய்களை பிடித்து பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டுமென பொது மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.