நாகர்கோவில்: மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யூ சார்பில் ஆர்ப்பாட்டம்

73பார்த்தது
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டு வரும் பன்னாட்டு நிறுவன ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனை சீர்குலைக்கும் விதத்தில் போராட்டத்தில் ஈடுபடும் தலைவர்களை கைது செய்யும் தமிழக அரசின் செயல்களை கண்டித்தும், தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியும் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகிறது.

அந்த வகையில் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன் சி.ஐ.டி.யு. சார்பில் நேற்று (செப்.,21) ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட செயலாளர் தங்கமோகன் தலைமை தாங்கினார். மாநில குழு உறுப்பினர் இந்திரா ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் ஐடாஹெலன், அந்தோணி உள்பட பலர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

தொடர்புடைய செய்தி