கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி போலீசார் நேற்று கனகமூலம் சந்தை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகப்படும் படியாக சுற்றித்திரிந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் திருவிதாங்கோடு கேரளபுரம் ஆலடி குண்டு காலனியை சேர்ந்த தாவூத் (வயது 42) என்பதும், அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்றதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து தாவூத்தை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 8 லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.