கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் நேற்று மேலகிருஷ்ணன்புதூர் அருகே ரோந்து சென்றனர். அப்போது அங்கு கஞ்சா விற்ற ராமன்புதூரை சேர்ந்த சதீஷ் என்ற அருள் (வயது 21) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 25 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவரது வீட்டில் ஏதேனும் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதா என்பது குறித்தும் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். ஆனால் வீட்டில் கஞ்சா எதுவும் இல்லை. இதனையடுத்து சதீசின் வங்கி கணக்கு முடக்கப்பட்டது.