நாகர்கோவில் வலம்புரி விளையில் மாநகராட்சி குப்பை கிடங்கு உள்ளது. நகர் முழுவதும் சேகரிக்கும் கழிவுகள் இந்த குப்பை கிடங்கில் சேகரிக்கப்படுகிறது. மலைபோல் குவிந்துள்ள குப்பையில், அடிக்கடி தீ விபத்து ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது.
இந்தநிலையில் நேற்று (ஆக.,26) குப்பை கிடங்கில் தீ பிடித்தது. இது பற்றி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். மாவட்ட தீயணைப்பு அலுவலர் சத்யகுமார் உத்தரவின் பேரில் உதவி கோட்ட அலுவலர் துரை மற்றும் தீயணைப்பு துறையினர் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறி உள்ளது.
இந்த நிலையில் இன்று (27-ம் தேதி) 2-ம் நாளாக தீயணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்த பகுதியில் புகை மூட்டத்தால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத் துக்கு உள்ளாகி உள்ளனர். மேலும் துர்நாற்றமும் வீசி வருகிறது. சம்பவ இடத்தில் நாகர்கோவில் மாநகராட்சி அதிகாரிகள் சென்று தீயை கட்டுப்படுத்தும் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.