தமிழ்நாடு அரசு இன்று (ஞாயிற்றுக்கிழமை) பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படும் என்றும், பத்திரங்கள் பதிவு செய்யலாம் என்றும் நேற்று (பிப்.1) அறிவித்தது. இந்த நிலையில் நாகர்கோவிலில் பத்திரப்பதிவு அலுவலகம் இன்று செயல்படவில்லை. மாவட்ட பதிவாளர் அலுவலகம் மூடப்பட்டுள்ளது. பத்திரப்பதிவு பணியாளர்கள் பணிபுறக்கணிப்பு காரணமாக பத்திரப்பதிவு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.