வெள்ளிச்சந்தையில் விசம் குடித்து தொழிலாளி தற்கொலை

1051பார்த்தது
வெள்ளிச்சந்தையில் விசம் குடித்து தொழிலாளி தற்கொலை
கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை அருகே வேம்பனூர் விளைவீடை சேர்ந்தவர் ஐயப்பன் (63). கூலித்தொழிலாளி. இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனைவி கிருஷ்ணகுமாரிவுடன் தினம் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. நேற்று முன்தினம் கிருஷ்ணகுமாரி வில்லுக்குறியில் உள்ள மகள் வீட்டிற்கு சென்றார். நேற்று காலை அவர் வேம்பனூர் திரும்பினார். அப்போது ஐயப்பன் கதவை திறக்கவில்லை. இதனால் கிருஷ்ணகுமாரி பின் பக்க கதவை தள்ளி திறந்து உள்ளே சென்றபோது, ஐயப்பனிடமிருந்து விச வாடை அடித்தது. உடனே அவர் அக்கம்பக்கத்தாரின் உதவியுடன் ஐயப்பனை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனக்கு கொண்டு சென்றனர். அங்கு ஐயப்பனை பரிசோதித்த மருத்துவர் ஐயப்பன் ஏற்கனவே இறந்து விட்டார் என தெரிவித்தனர். இது குறித்து கிருஷ்ணகுமாரி வெள்ளிச்சந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வாழ்க்கையில் வெறுப்படைந்த ஐயப்பன் வீட்டில் மனைவி இல்லாத நேரத்தில் ஏதோ விசம் குடித்து இறந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி