கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே திருவள்ளுவர் தெருவில் நேற்றிரவு புகுந்த சுமார் 6 அடி நீள நல்ல பாம்பு அந்த பகுதியில் உள்ள நெல்சன் என்பவரின் வீட்டு தோட்டத்தில் புகுந்து மரக்கட்டைகளில் இடையே பதுங்கி இருந்தது. உடனடியாக குளச்சல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் மரக் கட்டைகளை அகற்றி பதுங்கி இருந்த நல்ல பாம்பை பிடித்தனர்.