அதிமுக உட்கட்சி விவகாரம் பற்றி விசாரிக்க தேர்தல் ஆணையத்துக்கு விதித்த தடையை நீக்க கோரிய மனுக்கள் மீது சென்னை உயர்நீதிமன்றம் பிப்.12ம் தேதி தீர்ப்பு வழங்க உள்ளது. கட்சியில் எந்தப் பிளவும் இல்லை. தனக்கு இருந்த ஆதரவு நீடிக்கிறது. எந்த மாற்றமும் இல்லை. பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில் சின்னத்தை முடக்கினால் கட்சிக்கு ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பு கூறியுள்ள நிலையில், பிப்.12-ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.