கோவை - திருப்பதி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த 4 மாத கர்ப்பிணிக்கு, ஓடும் ரயிலில் பாலியல் தொல்லை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் கீழே தள்ளிவிடப்பட்டார். இந்த விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை செய்தது. தொடர்ந்து, “சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்து, புதிய கிரிமினல் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். எஃப்.ஐ.ஆர் உள்ளிட்ட விரிவான அறிக்கையை 3 நாள்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும்” என டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.