மும்பையில் 17 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த 24 வயது இளம்பெண் கைது செய்யப்பட்டார். சிறுமியை ரிசார்ட்டில் அடைத்து வைத்த இளம்பெண், பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. கல்லூரிக்குச் செல்வதாக கூறிவிட்டுச் சென்ற சிறுமியின் செல்போனில் இருந்து அவரது பெற்றோருக்கு, ‘என்னை பற்றி கவலைப்பட வேண்டாம்’ என மெசேஜ் வந்துள்ளது. இதுகுறித்து போலீசில் புகார் அளித்த நிலையில், சிறுமி மீட்கப்பட்டார். விசாரணையில் இருவரும் ஒரு வருடமாக காதலித்து வந்தது தெரியவந்துள்ளது.