மாணவிக்கு பாலியல் தொல்லை: "மனம் பதைபதைக்கிறது" - அண்ணாமலை கண்டனம்

67பார்த்தது
மாணவிக்கு பாலியல் தொல்லை: "மனம் பதைபதைக்கிறது" - அண்ணாமலை கண்டனம்
தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் வெளியாகும் செய்திகளைப் படிக்கும்போது மனம் பதைபதைப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும், “கிருஷ்ணகிரி அரசுப் பள்ளி மாணவி, மூன்று ஆசிரியர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அதிர்ச்சி நீங்கவில்லை. மணப்பாறையில் 4ம் வகுப்பு மாணவிக்குப் பாலியல் தொல்லை, வேலூரில் ரயிலில் பயணித்த கர்ப்பிணிக்குப் பாலியல் தொந்தரவு, சேலத்தில், அரசுப் பள்ளி மாணவிக்குப் பாலியல் தொல்லை. சமூக விரோதிகளுக்கு, சட்டத்தின் மீதும், போலீஸ் மீதும் பயமில்லை” என்றார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி