உலகளவில் 2025ஆம் ஆண்டு ஜனவரி தான் வெப்பமான மாதமாக பதிவு செய்யப்பட்டு உள்ளது. 1991-2000ஆம் ஆண்டு வரையிலான ஜனவரியின் சராசரியுடன் ஒப்பிடுகையில், நடப்பாண்டு ஜனவரியின் சராசரி வெப்பநிலை 0.79°C கூடுதலாக பதிவாகி இருப்பதாக ஐரோப்பிய வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. ஆர்டிக் கடல் பகுதியில் இந்த ஜனவரியில் தான் மிக குறைந்த அளவில் பனி உருவாகி இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. இது சராசரியை விட 6% குறைவாகும். இந்தநிலையில், உலகிலேயே மிகவும் வெப்பமான மாதமாக 2025 ஜனவரி அறிவிக்கப்பட்டுள்ளது.