குமரி மாவட்டம் முட்டம் பகுதியில் தனியார் சொந்தமான மீன் பிடி துறைமுகம் உள்ளது. இங்கு அலங்கார மாதா தெருவை சேர்ந்த கார்லூஸ் மகன் சகாய ஸ்டாலின் (33) என்பவர் இணையதள என்ஜினியராக வேலை செய்து வருகிறார்.
சம்பவத்தினம் அதே பகுதியை சேர்ந்த மகேஷ் (33) மற்றும் ரமேஷ் (35) ஆகிய இரண்டு பேரும் துறைமுகத்திற்குள் புகுந்து சகாய ஸ்டாலினிடம் தகராறு செய்தனர். மேலும் அவரிடம் வேலையை விட்டு நீக்குவதற்கான நடவடிக்கை எடுப்போம் என மிரட்டி தாக்கியுள்ளனர்.
இதில் படுகாயம் அடைந்த சகாய ஸ்டாலின் குமரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் மகேஷ், ரமேஷ் ஆகிய இரண்டு பேர் மீது வெள்ளிச்சந்தை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.