கொல்லங்கோடு நகராட்சி அலுவலகம் முன்பு தொழிலாளி சத்தியாகிரகம்

74பார்த்தது
கொல்லங்கோடு நகராட்சி அலுவலகம் முன்பு தொழிலாளி சத்தியாகிரகம்
கொல்லங்கோடு நகராட்சிக்குட்பட்ட 3-ம் வார்டில் மாறாகுளம் உள்ளது. இந்த குளத்தை  தூர்வாரி பக்க சுவர் அமைத்து நான்கு பக்கமும் வேலி அமைக்க நகராட்சி நிர்வாகம் மூலம் சுமார் 40 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

       குளத்தை தூர்வாரும் பணியின்போது ஒப்பந்தக்காரர் சுமார் 2 ஆயிரம் டெம்போ அளவில் வண்டல் மண்ணை குளத்திலிருந்து எடுத்து,   சட்ட விரோதமாக கேரள மற்றும் தமிழக பகுதியில் டெம்போ ஒன்றுக்கு 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் ரூபாய்கு வரை விற்பனை செய்ததாக கூறப்படுகிறது.

   இந்த நிலையில் 5-ம் வார்டு பகுதியை சேர்ந்த சசி (55) தொழிலாளி நேரடியாக சென்று கொல்லங்கோடு நகராட்சி அலுவலகத்தில் புகார் கொடுத்தார். ஆனால் நகராட்சி நிர்வாகம் மற்றும் நகராட்சி பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகள்  குளத்தில் இருந்து வண்டல் மண் அள்ளிக் கொண்டு விற்பனை செய்த ஒப்பந்ததாரர் மீது எந்த நடவடிக்கை எடுக்கவில்லை.

     எனவே நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், மண்ணுக்கான இழப்பீடு ரூபாயை மாவட்ட ஆட்சியர், வருவாய் துறை மூலம் வசூலிக்க வேண்டும் என்று கேட்டு நேற்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கொல்லங்கோடு நகராட்சி அலுவலகம் முன்பு தனி மனிதனாக சசி சத்தியாகிரகம் போராட்டம் நடத்தினார்.   இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்தி