திருவட்டாறு: ஆதிகேசவன் கோவிலில் ரஷ்ய நாட்டினர் தரிசனம்

80பார்த்தது
திருவட்டாறில் மிகப் பிரசித்தி பெற்ற ஆதிகேசவ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று (7-ம் தேதி) ரஷ்ய நாட்டைச் சேர்ந்த ஹரே ராமா ஹரே கிருஷ்ணா இயக்கத்தின் கருணாமிர்தா தலைமையில் 20 பேர் கொண்ட குழுவினர் வருகை தந்தனர். தொடர்ந்து சாமி தரிசனம் செய்தனர். பின்னர், கோயில் உள்ள சிற்பங்களையும் கடவுள் சிலைகளையும் பார்த்து ரசித்தனர். பின்னர், 22 அடி நீளமும் 22 அடி அகலமும் கொண்ட ஒற்றைக் கல் மண்டபத்தில் உள்ள மூன்று வாயில்கள் வழியாக ஆதிகேசவ பெருமாளைத் தரிசித்தனர்.

தொடர்புடைய செய்தி