தளியல் முத்தாரம்மன் கோவில் அம்மன் வீதி உலா இன்று நடந்தது

64பார்த்தது
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலுடன் தொடர்பு உள்ள பிரசித்தி பெற்ற தளியல் முத்தாரம்மன் கோவில் கொடைவிழா கடந்த ஏப்ரல் 20. ந்தேதி துவங்கியது.
விழா நாட்களில் தேவிஸ்துதி, குங்குமாபிஷேகம், பஸ்மாபிஷேகம், குங்கும அர்ச்சனை, புஷ்பாபிஷேகம், சங்கீத அர்ச்சனை, குடியிருப்பு தீபாராதனை, நாதஸ்வர கச்சேரி, வலியபடுக்கை, ஆகியன நடந்தது
4. ம் நாளான இன்று அபிஷேகம், செண்டை, நையாண்டி, நாதஸ்வர மேளத்துடன் அலங்கார வாகனத்தில் அம்மன் வீதி உலா நடைபெற்றது.
திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவில் தெரு, காங்கரை பகுதிகளில் பவனி வருதல் நடந்தது.
மாலை 4. மணிக்கு ஆதிகேசவப்பெருமாள் கோவில் எதிர்புற திற்பாதத்து கடவிலிருந்து பூநீர் எடுத்து வருதல், இரவு 8. 30 மணிக்கு குத்தியோட்டம், பூமாலை, பிடிப்பணம் முதலான நேர்ச்சை வழிபாடுகள், இரவு 9 மணிக்கு தேவன் ஊர்வலம், இரவு 12. மணிக்கு வாணவேடிக்கை, 1 மணிக்கு ஒடுக்கு பூஜை ஆகியன நடக்கிறது.
5. ம் நாள் (24. ம் தேதி) காலை 7. 30 மணிக்கு உஷபூஜை, தீபாராதனை, மதியம் 1 மணிக்கு உச்சக்கொடை, தீபாராதனை, 1. 30 மணிக்கு வாழ்த்துப்பாடி தீபாராதனை ஆகியவற்றுடன் விழா நிறைவடைகிறது.
விழா ஏற்பாடுகளை தளியல் ஸ்ரீமுத்தாரம்மன் கோவில் அறக்கட்டளை னர். நிர்வாகக்குழுவினர், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்

தொடர்புடைய செய்தி