இறக்கும் தருவாயிலும் காரில் இருந்தவர்களை காப்பற்றிய ஓட்டுநர்

51பார்த்தது
இறக்கும் தருவாயிலும் காரில் இருந்தவர்களை காப்பற்றிய ஓட்டுநர்
தக்கலை அருகே உள்ள மேட்டுக்கடை பகுதி சேர்ந்தவர் ஜான்சன் (61). டிரைவரான இவர் இன்று (29-ம் தேதி)  காலை 6 மணி அளவில் அதே பகுதியை சேர்ந்த டாக்டர் குடும்பத்தினரை அழைத்துக் கொண்டு திருநெல்வேலிக்கு புறப்பட்டார்.

ஆரல்வாய்மொழி தேசிய நெடுஞ்சாலை பகுதியில்  கார் சென்று கொண்டிருந்தபோது, திடீரென ஜான்சனுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதில்  நிலை தடுமாறியவர் நெஞ்சுவலியை  பொருட்படுத்தாமல் உடனடியாக காரில் இன்டிகேட்டர் போட்டு இடது பக்கமாக காரை ஓதுக்கி நிறுத்திவிட்டு அவர் மயங்கினார்.

காரில் இருந்த டாக்டர் உடனடியாக முதலுதவி செய்து, அவசரமாக குமரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அவரை கொண்டு சென்றார். ஆனால் அங்கு பரிசோதித்த போது, ஜான்சன் ஏற்கனவே இறந்தது தெரிய வந்தது. உடனடி உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

நெஞ்சுவலி ஏற்பட்டும், காரில் இருந்தவர்களை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் சுதாரித்து காரை இடது புறமாக நிறுத்தி உயிரை விட்ட சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி