குமரி: கடலரிப்பு தடுப்புசுவர் பணியை அமைச்சர் துவக்கினார்

70பார்த்தது
கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இரையுமன்துறை மீனவ கிராமம் தொடர் கடல் அரிப்பு காரணமாக அழியும் நிலையில் இருந்து வருகிறது.  இதனை தடுக்க தமிழக அரசு தூண்டில் வளைவு மற்றும் கடலரிப்பு தடுப்பு சுவர் அமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தொடர் கோரிக்கை விடுத்து வந்தனர்.
     
இதனையடுத்து தமிழக அரசு இரையுமன்துறை மீனவ மக்களின் கோரிக்கையை ஏற்று தூண்டில் வளைவு மற்றும் கடலரிப்பு தடுப்பு சுவர் அமைக்க 35 கோடி ருபாய் நிதி ஒதுக்கீடு செய்தது. இதன் பணி துவக்க நிகழ்ச்சி இன்று (25-ம் தேதி) நடந்தது. தமிழக பால் வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ்   துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அழகு மீனா, குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி