4 ஜேசிபி டயர்களை சுமந்த குமரி வீரர்

1904பார்த்தது
4 ஜேசிபி டயர்களை சுமந்த குமரி வீரர்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே தாமரை குட்டி விளையை சேர்ந்தவர் கண்ணன் (42). இந்திய அளவில் வலுவான மனிதர் என்பதை நிரூபிக்கும் இரும்பு மனிதன் பட்டத்தை வென்ற இவர் அதிக எடையுள்ள பொருட்களை தூக்கியபடி நடந்து சாதனை புரிந்து வருகிறார். ஏற்கனவே பஞ்சாபில் நடந்த உலக இரும்பு மனிதன் போட்டியில் கண்ணன் வெள்ளி பதக்கம் பெற்றார். ஸ்பெயினில் நடைபெற்ற அர்னால்டு கிளாசிக் உலக இரும்பு மனிதன் போட்டியில் பங்கேற்று தனது திறமையை வெளிப்படுத்தினார். அதிகப்பளுவை தூக்கி நடந்து சென்றதன் மூலம் சோழன் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட் புத்தகத்தில் நான்கு முறை இடம்பெற்றுள்ளார். இந்த நிலையில் அமெரிக்காவில் நடைபெற உள்ள உலக இரும்பு மனிதன் போட்டியில் பங்கேற்கும் விதமாக மும்பையில் 'இந்தியா காட் டேலண்ட் போட்டி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க தமிழ்நாட்டிலிருந்து கண்ணன் தேர்வாகியுள்ளார். இதற்காக அவர் நேற்று நாகர்கோவில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில்  4 ஜேசிபி டயர்களை தோளில் தூக்கியவாறு 30 மீட்டர் தூரம் நடந்தும், இரண்டு டயரை தலைக்கு மேல் தூக்கியவாறு படிக்கட்டிலும்,   கடற்கரையில் நடந்து சென்று பார்வையாளர்கள் மத்தியில் பயிற்சி மேற்கொண்டார்.

தொடர்புடைய செய்தி