கொல்லங்கோடு: காரில் கடத்திய 750 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்

74பார்த்தது
கொல்லங்கோடு: காரில் கடத்திய 750 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்
கொல்லங்கோடு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நேற்று முன்தினம்  இரவு சிறப்பு எஸ் ஐ கிறிஸ்துதாஸ் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இரவு 11 மணி அளவில் ஒரு சொகுசு கார் காவல் நிலையம் வழியாக ஊரம்பை நோக்கி சென்று உள்ளது.

     அப்போது காரை சோதனை செய்வதற்காக சிறப்பு எஸ் ஐ சைகை காட்டியுள்ளார். ஆனால் கார் நிற்காமல் சென்றுள்ளது. இதை அடுத்து சிறப்பு எஸ்ஐ பைக்கில் பின் தொடர்ந்து சென்று சுமார் 10 கிலோமீட்டர் தூரம் கடந்து வள்ளவளை மீனவ கிராமத்தில் கார்  சென்றது.   கடற்கரை பகுதியில் சொகுசு வானத்தை நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடி உள்ளார். இதையடுத்து சிறப்பு எஸ்ஐ வாகனத்தை சோதனை செய்தபோது அதில் 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 21 கேன்களில் 750 லிட்டர் படகுக்கு மானிய விலை வழங்கப்படும் மண்ணெண்ணெய் இருந்தது கண்டறியப்பட்டது.  

     தொடர்ந்து கார் மற்றும் மண்ணெண்ணெய் பறிமுதல் செய்து கொல்லங்கோடு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் கார் மற்றும் மண்ணெண்ணெயை கிள்ளியூர் வட்ட வழங்கல் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி