தனது தொடர் முயற்சியால் 15-வது நிதிக்குழு திட்டத்திலிருந்து, செம்மான்விளை ஆறுதேசம் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொது சுகாதார நிலைய மருத்துவ கட்டிடம் அமைக்க (ரூ. 50 - லட்சம்) நிதி ஒதுக்கீடு பெற்று, தற்போது கட்டிடப் பணிகளை அடிக்கல் நாட்டி துவக்கி வைத்திருக்கிறார் சட்டமன்ற காங்கிரஸ் தலைவரும், கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினருமான (Adv. திரு. ராஜேஷ் குமார்) அவர்கள்.
நிகழ்ச்சியில் முஞ்சிறை மேற்கு வட்டார தலைவர் திரு. விஜயகுமார், மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், துணை அமைப்புகளின் நிர்வாகிகள், முன்னாள் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், தேசிய தோழர்கள் மற்றும் முஞ்சிறை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மற்றும் மருத்துவ பணியாளர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.