கிள்ளியூர்: புற்றுநோய் ஆராய்ச்சி மையம் எம்எல்ஏ கோரிக்கை

79பார்த்தது
கிள்ளியூர்: புற்றுநோய் ஆராய்ச்சி மையம் எம்எல்ஏ கோரிக்கை
தமிழ்நாடு சட்டமன்றத்தில் ராஜேஷ் குமார் எம்எல்ஏ பேசியதாவது: - குமரி மாவட்டத்தில் 92% படித்த இளைஞர்கள் இருக்கின்றார்கள். ஆனால் அவர்களுக்கான வேலை வாய்ப்புகள் பெரும் சிரமமாக உள்ளது. இளைஞர்கள் பயனடையும் வகையில் சிறப்பு பொருளாதார மண்டலம், தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைத்திட கேட்டுக்கொள்கிறேன். அதோடு ரப்பர் பூங்காவும் அமைக்க வேண்டும். 

குழித்துறை ஆற்றுக் கூட்டுக் குடிநீர் திட்டம் 1996 ஆம் ஆண்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. இது பல்வேறு இடங்களில் சிமெண்ட் குழாய்கள் பழுதடைந்து குடிநீர் வழங்குவதில் அடிக்கடி தடைகளும் சிக்கல்கள் ஏற்படுகின்றன. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள கூட்டுக் குடிநீர் மறுசீரமைப்புத் திட்டத்தின் மூலம் பழைய குழாய்களை சீரமைத்து தடை இல்லாமல் குடிநீர் கிடைக்க செய்ய வேண்டும். 

கருங்கல் வேன் ஸ்டாண்டில் புதிதாக 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டி, ஆலஞ்சியில் புதிய பேருந்து நிலையம், புதிதாக உருவாக்கப்பட்ட கொல்லங்கோடு நகராட்சியில் பேருந்து நிலையம் அமைத்து தர வேண்டும். 

குமரி மாவட்டத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்கள் அதிகமாக இருக்கிறார்கள். புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெறும் வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனைத்து வசதிகளும் கொண்ட புற்றுநோய் ஆராய்ச்சி மையம் வேண்டும். என பேசினார்.

தொடர்புடைய செய்தி