கீழ்குளம் அரசு தொடக்க பள்ளியில் ஐம்பெரும் விழா

63பார்த்தது
கீழ்குளம் அரசு தொடக்க பள்ளியில் ஐம்பெரும் விழா
கீழ்குளம் வலியவிளை அரசு தொடக்கப்பள்ளியில் பள்ளி ஆண்டு விழா, விளையாட்டுதினவிழா, பள்ளி மேலாண்மை குழுவிழா, பெற்றோர் ஆசிரியர்தினவிழா, முன்னாள் மாணவர் குழு விழா, ஆகிய ஐம்பெருவிழா நடைபெற்றது.

           விழாவிற்கு கிள்ளியூர் வட்டார கல்வி அலுவலர் கலாவதி தலைமை தாங்கினார். கீழ்குளம் பேரூராட்சி துணைத் தலைவர் விஜயகுமார், பேரூராட்சி உறுப்பினர் அனிதா ராஜகிளன் மற்றும் சோபா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் கனகராஜ் வரவேற்றார். தலைமை ஆசிரியர் ஜெஸி ஜேனட் ஆண்டறிக்கை வாசித்தார். ஓய்வு பெற்ற பி. இ. ஓ. சாம் ராஜ்  சிறப்புரையாற்றினார். கிள்ளியூர் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் ஏசுதாசன், ஜெனிட்டா, ஜெனிலா ஆகியோர் வாழ்த்தி பேசினர். முன்னாள் மாணவர் அறக்கட்டளை செயலாளர் பால்ராஜ் நன்றி கூறினார்.     

          மாணவ மாணவிகள், பெற்றோரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி