கிள்ளியூரில் அனுமதியின்றி ஐஸ் பிளான்ட் கலெக்டரிடம் புகார்

51பார்த்தது
கிள்ளியூர் பேரூராட்சிக்குட்பட்ட 17 வது வார்டு நெல்லி விளை பகுதியை சேர்ந்த ஊர் பொதுமக்கள் நாகர்கோவிலில் உள்ள குமரிமாவட்ட ஆட்சியரை சந்தித்து இன்று மனு ஒன்று அளித்தனர். அந்த மனுவில் கூறியுள்ளதாவது: - 
     கிள்ளியூர் பேரூராட்சி 17 வது வார்டு நெல்லிவிளை பகுதியில் டேனி சாலமன் என்பவர் சாலமன் ஐஸ் பிளான்ட் என்ற பனிக்கட்டி தொழிற்சாலையை குடியிருப்புகள் நிறைந்த பொது நீர்நிலைகள், பொது கிணறுகள் நீரோடை வழிபாட்டுத்தலங்கள் மற்றும் பள்ளிக்கூடம் அமைந்த குறுகிய சாலையை கொண்ட இடத்தில்,   தொழிற்சாலை அமைக்க தகுதியற்ற பகுதியில் அமைத்துள்ளார்.

      இது குறித்து கிள்ளியூர் பேரூராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தொடர்ந்து ஐஸ் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. மேலும் ஐஸ் தொழிற்சாலைக்கு எந்தவித அனுமதியும் இல்லை.  

     தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தை மீறி முறையான அனுமதி பெறாமல் அதை இயக்கி வருகின்றனர். இதற்கு பேரூராட்சி நிர்வாகமும் துணை போகிறது.   உடனடியாக மாவட்ட ஆட்சியர் இதனை தடுத்து நிறுத்த வேண்டும் இல்லை என்றால் தங்களுக்கும் வீடு கட்டிடங்கள் மற்றும் வரி விலக்கு அளிகக் வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து மனு அளித்துள்ளனர். மேலும் தொழிற்சாலையை தடுத்து நிறுத்த விட்டால் போராட்டங்களில் ஈடுபட போவதாக தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி