தண்டலம் ஊராட்சியில் ஆக்கிரமிப்புகள் அகற்ற வட்டாட்சியரிடம்மனு

68பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அடுத்த தண்டலம் ஊராட்சியில் உள்ள ஏரியில் இருந்து விவசாய நிலத்திற்கு செல்லும் நீர்வழி தடங்களை தனியார் அடுக்குமாடி கட்டுமான நிறுவனம் ஆக்கிரமித்து வந்துள்ளதை மீட்டெடுக்க கோரி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் திருப்போரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். 

நீர்வழி பாதையை அடைத்து விவசாய நிலங்களுக்கு தண்ணீர் செல்லாதவாறு ஆக்கிரமித்துள்ளதால் சுமார் 100 ஏக்கர் விவசாய நிலங்களில் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் அவதிக்குள்ளாவதாக குற்றம் சாட்டினர். 

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பாமகவை சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர் தட்சிணாமூர்த்தி கேட்டபோது தனியார் அடுக்குமாடி கட்டிட நிறுவனங்களை சேர்ந்தவர்கள் குண்டர்களை வைத்து தாக்கியதாக திருப்போரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டிய பாமகவினர் இதுகுறித்து இன்று திருப்போரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். 

மேலும் காவல்துறையும், வருவாய்துறையும் உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் வரும் 14 ஆம் தேதி பாமக சார்பில் ஒட்டுமொத்த விவசாயிகளை ஒன்றுதிரட்டி திருப்போரூரில் 2,000 பேர் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி