உத்திரமேரூர் பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்.

537பார்த்தது
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியை பெற்றோர்கள் முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு. காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ம் வகுப்புவரை சுமார் 1500 க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்த பள்ளி சுமார் 40 ஆண்டுகள் பழமையான பள்ளி கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் ஐந்திற்கும் மேற்பட்ட முறை பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் சில மாணவிகள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.

இந்த நிலையில் தமிழக பள்ளி கல்வித்துறை மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் இந்த பள்ளி கட்டிடத்தை இடிக்க உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளை பள்ளி கட்டுமான பணிகள் முடியும்வரை உத்திரமேரூர் அடுத்த பாப்பான்குளம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளிக்கு இடம் மாற்றம் செய்து, வரும் 24ம் தேதி திங்கட்கிழமை முதல் செயல்படும் என்று பள்ளி நிர்வாகம் அறிவித்தது.

இதனால் ஆத்திரமடைந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்ததால் அங்கு பரபரப்பு நிலவியது. பின்பு பள்ளி நிர்வாகம் பள்ளி இடம் மாற்றத்தை கைவிடுவதாக வாக்குறுதி அளித்தனர். அதனை தொடர்ந்து அனைவரும் களைந்து சென்றனர்.

தொடர்புடைய செய்தி