மதுராந்தகம் நகரில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

54பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பேருந்து நிலையம் அருகாமையில் அமைந்துள்ள புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 108ஆவது பிறந்தநாள் விழா மதுராந்தகம் நகரக் கழக செயலாளர் பூக்கடை கே சி சரவணன் தலைமையில் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து திருஉருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செய்தனர். 

கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி எம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழாவை வெற்றிகரமாக கொண்டாடி மகிழ்ந்தனர். இந்த நிகழ்ச்சியில் வாலிபால் போட்டியில் வெற்றி பெற்ற மூன்று அணியினருக்கு கோப்பைகள் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி