காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே, வல்லம் -- வடகால் சிப்காட் தொழிற்பூங்காவில், 100க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. இங்குள்ள சிப்காட் சாலையில், தனியார் தொழிற்சாலை சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ், சாலை மீடியனில் சுற்றுச்சூழலை பாதுகாப்பை வலியுறுத்தி, இயற்கை ஓவியம் வரையப்பட்டு வருகிறது. அதில், புள்ளி மூக்கு வாத்து, மீன் கொத்தி, கரும்பருந்து, நீளவால் தாழைக்கோழி, தலைக்கோழி, தாமிர இறக்கை இலைக்கோழி உள்ளிட்ட பறவைகள் இடம்பெற்றுள்ளன.இந்த இயற்கை ஓவியங்கள் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. தொடர்ந்து, ஒரகடம், இருங்காட்டுக்கோட்டை, பிள்ளைப்பாக்கம், ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் பகுதிகளிலும் இந்த திட்டத்தை விரிவுப்படுத்த வேண்டும் என, இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.