உத்திரமேரூரில் வேர்க்கடலை அறுவடை பணி தீவிரம்

158பார்த்தது
உத்திரமேரூரில் வேர்க்கடலை அறுவடை பணி தீவிரம்
உத்திரமேரூர் ஒன்றியத்தின் பல கிராமங்களில், மானாவாரி பருவத்திற்கு வேர்க்கடலை சாகுபடி செய்வது வழக்கம். அதன்படி, கடந்த ஜூன், ஜூலை மாதங்களில், காவனுார் புதுச்சேரி, மேனலூர், பாரதிபுரம், சித்தாலப்பாக்கம் அமராவதிப்பட்டணம் உள்ளிட்ட பல கிராமங்களில், விவசாயிகள் வேர்க்கடலை பயிரிட்டனர்.

அவை காய் பிடித்து அறுவடைக்கு தயாரான நிலையில், சில நாட்களாக அடிக்கடி மழை பெய்து வருகிறது.

இந்த மழையால், வேர்க்கடலை சாகுபடி செய்த நிலங்களில் ஈரப்பதம் அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக சில நாட்களாக வேர்க்கடலை அறுவடை பணிகளை விவசாயிகள் துவக்கி உள்ளனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி