சூறை ஊராட்சியில் கிராம சபை கூட்டம்

52பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஒன்றியத்திற்கு உட்பட்ட சூறை ஊராட்சியில் 76 ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் வேதாசலம் தலைமையில் நடைபெற்றது. 

இந்த கிராம சபை கூட்டத்தில் ஊராட்சியின் வளர்ச்சித் திட்டப் பணிகள், பாழடைந்த அரசுக் கட்டிடங்களைப் புதுப்பிக்க கட்டிடம் கட்டுவதற்கான முக்கிய தீர்மானங்கள், சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்துவது குறித்து முக்கிய தீர்மானங்கள் இந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. 

இந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் சுதா கண்ணன் மற்றும் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி