செங்கல்பட்டில் அரசு ஊழியர்கள் திடீர் சாலை மறியல் போராட்டம்

53பார்த்தது
செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் மாவட்டத் தலைவர் சுதர்சன் தலைமையில் சுமார் 50க்கும் மேற்பட்ட அரசு அலுவலர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

குறிப்பாக வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள ஊராட்சி செயலாளர் பணியிடங்கள் உள்ளிட்ட அனைத்து நிலை காலி பணியிடங்களையும் உடனே நிரப்புதல், கலைஞர் கனவு இல்லம் மற்றும் ஊரக வீடுகள் பழுது நீக்கம் உள்ளிட்ட அனைத்து வீடுகள் கட்டும் திட்டங்களுக்கும் உரிய பணியிடங்களை ஏற்படுத்துதல், வளர்ச்சித் துறை ஊழியர் மீது திணிக்கப்படும் பிற துறை பணிகளை முற்றிலுமாக கைவிடவேண்டும், கிராம ஊராட்சிகளை பேரூராட்சி மற்றும் நகராட்சிகளாக தரம் உயர்த்தும் நடவடிக்கைகளை ரத்து செய்தல், மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளுடன் கிராம ஊராட்சிகளை இணைத்தல் நடவடிக்கைகளை முற்றிலுமாக கைவிடுதல், கிராமப்புற தன்மை கொண்ட பேரூராட்சி மற்றும் நகராட்சிகளை கிராம ஊராட்சிகளாக மாற்றம் செய்தல், உள்ளாட்சித் தேர்தல் பணிகளுக்கு நிரந்தர ஊழியர் கட்டமைப்பு வசதிகளை மாநில மாவட்ட வட்டார அளவில் ஏற்படுத்துதல் உள்ளிட்ட 21 முக்கிய அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சுமார் 50-க்கும் மேற்பட்ட அரசு அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு பிறகு திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி