பேருந்து ஓட்டும் போது நெஞ்சு வலி: 45 பயணிகளின் உயிரை காப்பாற்றிய அரசுப் பேருந்து ஓட்டுனர்.
சிகிச்சை பலனின்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் உயிரிழந்த சோகம்.
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில் வசித்து வந்தவர் திரக்க்ஷன் வயது (47) இவர் சென்னை மாநகர அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுனராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை அன்று மாலை வழக்கம் போல தடம் எண் 578 என்ற பேருந்தை சுங்குவார்சத்திரத்தில் இருந்து பூந்தமல்லி நோக்கி 45 பயணிகளுடன் புறப்பட்டார் அப்போது ஸ்ரீபெரும்புதூர் அருகே செல்லும்போது ஓட்டுனருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது இதனை சுதாரித்துக் கொண்ட ஓட்டுநர் தன் வாகனத்தில் பயணம் செய்யும் 45 பயணிகளின் உயிர் மிகவும் முக்கியம் என்று லாபகரமாக வண்டியை நிறுத்தி பேருந்தில் பயணம் செய்த பயணிகளை மாற்று பேருந்தில் அனுப்பி வைத்தனர்.
பின்பு ஓட்டுநரை ஸ்ரீ பெருமந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தினர் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையை பரிந்துரை செய்தார்.
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஓட்டுனர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்பு உடலை கைப்பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.