காஞ்சிபுரத்தில் மாட வீதியில் நெரிசல்

61பார்த்தது
காஞ்சிபுரத்தில் மாட வீதியில் நெரிசல்
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் தங்களின் வாகனங்களை வடக்கு மாட வீதியில் சாலையின் இரு ஓரங்களிலும் நடைபாதையை மறித்து நிறுத்துகின்றனர். இதனால், அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக விடுமுறை மற்றும் முகூர்த்த நாட்களில் இச்சாலையை கடப்பது கடினமாக உள்ளது. மேலும், நடைபாதையில் நடந்து செல்ல வேண்டிய பாதசாரிகள் சாலையில் நடந்து செல்வதால் விபத்து ஏற்படும் சூழல் உள்ளது. எனவே, வரதராஜ பெருமாள் கோவிலுக்கு வரும் வாகனங்கள், மாட வீதிகளில் நிறுத்த தடை விதிக்க வேண்டும்.

தொடர்புடைய செய்தி