இரண்டு நாட்களாக சேற்றில் சிக்கி போராடிய பசு மீட்பு

62பார்த்தது
இரண்டு நாட்களாக சேற்றில் சிக்கி போராடிய பசு மீட்பு
திருப்போரூர் அடுத்த ஆமூர் ஏரியில், கடந்த ஆண்டு துார் வாரப்பட்டது. தற்போது, மழை பெய்துவரும் நிலையில், ஏரியில் தண்ணீர் தேங்கி, சேறும் சகதியுமாகஉள்ளது.

இந்நிலையில், ஆமூர் மற்றும் முந்திரிதோப்பு கிராமத்தின் ஏரி மத்தியில், மண் சேற்றில் பசு மாடு ஒன்று சிக்கிக்கிடந்தது. நேற்று, இதைப் பார்த்த அப்பகுதியைச் சேர்ந்த பிளாரன்ஸ் என்பவர், பசுவை சேற்றில் சிக்கிய மீட்க முயற்சி செய்தார்.

நான்கு கால்களும் சேற்றில் சிக்கியதால், அவரால் மீட்க முடியவில்லை. பின், அப்பகுதி நண்பர்களை அழைத்தச் சென்று, மீட்க முயற்சி செய்தும் முடியவில்லை.

உடனே, 101க்கு தொடர்புகொண்டு தகவல் அளித்தார். அதன்படி, சம்பவ இடத்திற்கு வந்த திருப்போரூர் தீயணைப்பு வீரர்கள், 6 பேர் குழுவினர், துரிதமாக செயல்பட்டு, சேற்றில் சிக்கிய பசுவை போராடி மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

அந்த பசு, கடந்த இரண்டு நாட்களாகவே சேற்றில் சிக்கி, உயிருக்கு போராடியுள்ளதாக, தீயணைப்பு வீரர்கள்தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி