செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த வல்லிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுதன்குமார் வழக்கறிஞரான இவரும், இவரது மனைவி முத்துலட்சுமியும் உறவினர் வீட்டு விழாவிற்கு சென்று மீண்டும் பைக்கில் இருவரும் வீட்டிற்கு வந்துக்கொண்டிருக்கும் போது இவர்களுக்கு பின்னால் காரில் வந்தவர்கள் வழக்கறிஞரின் பைக்கை வேகமாக மோதினர். வழக்கறிஞரையும், அவரது மனைவியையும் பார்த்து கேலி கிண்டல் செய்துள்ளனர். உடனே காரில் வந்தவர்களிடம் ஏன் இப்படி வண்டியை இடித்தீர்கள். கேலி, கிண்டல் செய்து கலாட்டா செய்கிறீர்கள் என்று வழக்கறிஞர் சுதன்குமார் கேட்ட போது காரில் வந்த 4 பேரும் சேர்ந்து வழக்கறிஞரை தாக்கியதில் வழக்கறிஞருக்கு பலத்த காயம் ஏற்பட்டு, சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வழக்கறிரை தாக்கிய காவாத்தூரை சேர்ந்த குமரேசன் ஆனூர் கிராமத்தை சேர்ந்தவர்களான சுகுமார் சந்தோஷ், கர்ணா ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்நிலையில் குற்றவாளிகள் மீது குறைந்த பட்ச தண்டனை வழங்கக்கூடிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் , கடுமையான தண்டனை வழங்கக்கூடிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தியும். காவல் துறை ஏன் இவர்களை காப்பாற்றுகின்றது என காவல் துறையை கண்டித்து. வழக்கறிஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.