ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் அரசுப்பேருந்து மீது மோதி இரு சக்கர வாகனத்தில் சென்ற தாய், மகன் இருவரும் நிகழ்விடத்திலேயே துடிதுடித்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சாலையோரம் எரியும் குப்பையில் இருந்து கிளம்பிய கரும்புகையால், எதிரே வந்த பேருந்தை கவனிக்க முடியாமல் பைக் அரசுப்பேருந்து மீது மோதியுள்ளது. பேருந்து மேலே ஏறியதில் பூமேஸ்வரன் (29) உடல் நசுங்கியும், தாயார் கந்தையாள் (59) தலை துண்டிக்கப்பட்டும் உயிரிழந்துள்ளனர்.