தேனி: சின்னமனூரை சேர்ந்த அவனிகா (21) என்ற திருமணமான பெண்ணுக்கு எதிர்வீட்டு ராம்குமார் (24) என்பவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. நேற்று (நவ.10) அவனிகா மட்டும் வீட்டில் தனியே இருந்த போது ராம்குமார் வந்துள்ளார். இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் வீட்டின் கதவை பூட்டியுள்ளனர். பின்னர் ராம்குமார் இனிமேல் இதுபோல் நடந்து கொள்ளமாட்டேன் என தெரிவிக்கவே பொதுமக்கள் கதவை திறந்து விட்டனர். இதையடுத்து, அவமானத்தில் அவனிகா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.