சாலை மேல் புது சாலை பள்ளத்தில் சென்ற வீடுகள்

69பார்த்தது
சாலை மேல் புது சாலை பள்ளத்தில் சென்ற வீடுகள்
வாலாஜாபாத் ஒன்றியம், முத்தியால்பேட்டை ஊராட்சி, சேனியர் தெருவில், ஒன்றிய பொதுநிதி 2023- - 24 திட்டத்தில் புதிதாக சிமென்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதில், பழைய சாலையை அகற்றாமல், அதன் மேலேயே புதிதாக சிமென்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

இதனால், அப்பகுதியில் உள்ள வீடுகள் ஒரு அடி வரை பள்ளத்தில் சென்றுள்ளது. இதனால், மழைபெய்யும்போது, வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து விடுவதாக அப்பகுதியினர் கவலை தெரிவிக்கின்றனர். எனவே, தமிழக அரசு பிறப்பித்துள்ள விதிமுறையின்படி ஏற்கனவே போடப்பட்டுள்ள பழைய சாலையை அகற்றிவிட்டு, புதிய சாலை அமைக்க வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.

தொடர்புடைய செய்தி