மண் அரிப்பால் நெடுஞ்சாலையோரம் சேதம்

58பார்த்தது
மண் அரிப்பால் நெடுஞ்சாலையோரம் சேதம்
சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரம், ஏனாத்துார் கட்டவாக்கம் கிராமம் உள்ளது. இந்த ஆறுவழி தேசிய நெடுஞ்சாலைக்கும், கட்டவாக்கம் கிராமத்திற்கும் செல்லும், தார் சாலை செல்கிறது.

சமீபத்தில் பெய்த மழையால், தேசிய நெடுஞ்சாலைக்கும், கிராமத்திற்கும் செல்லும் சாலையோர இணைப்பில், தார் சாலை அரிப்பு ஏற்பட்டு சேதம் ஏற்பட்டு உள்ளது.

இதனால், ஏனாத்துார், கட்டவாக்கம் கிராமத்தில் இருந்து, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை இணைக்கும் இடத்தில், வாகன ஓட்டிகள் வாகன விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே, சாலையோரம் ஏற்பட்டிருக்கும் சாலை அரிப்பை சரி செய்ய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி