பொத்தேரி தனியார் குப்பை கிடங்கில் தீ விபத்து

72பார்த்தது
பொத்தேரி தனியார் குப்பை கிடங்கில் தீ விபத்து
மறைமலை நகர் அடுத்த கிழக்கு பொத்தேரியில், காட்டூர் செல்லும் சாலையில் தனியார் மருத்துவக் கல்லுாரிக்கு சொந்தமான குப்பைக் கிடங்கு உள்ளது.

இந்த கிடங்கில், நேற்று முன்தினம் இரவு, திடீரென தீப்பற்றி, குப்பைக் கிடங்கு முழுதும் தீ பரவியது. தகவலறிந்து, சம்பவ இடத்திற்குச் சென்ற மறைமலை நகர் தீயணைப்பு வீரர்கள், தண்ணீரை பீய்ச்சி அடித்து, தீயை அணைக்க முயன்றனர்.

தொடர்ந்து, மகேந்திரா சிட்டி தீயணைப்பு நிலையத்தில் இருந்து, கூடுதலாக வீரர்கள் மற்றும் தீயணைப்பு வாகனம், தனியார் டேங்கர் லாரிகளில் தண்ணீர் கொண்டு வரப்பட்டன.

தொடர்ந்து, நான்கு மணி நேரத்திற்கும் மேலாக போராடி, தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இச்சம்பவம் காரணமாக, அப்பகுதி முழுதும் புகை மண்டலம் போல காட்சியளித்தது.

தொடர்புடைய செய்தி