விவசாயிகள் கண்ணில் கருப்பு துணி கட்டி போராட்டம்

68பார்த்தது
மதுராந்தகம் அருகே நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்யாமல் இழுத்தடிக்கும் அரசு அதிகாரிகள்

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அருகே பெரும்பேர் கண்டிகை ஊராட்சியில் கோடைகால நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது இந்த நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளின் அறுவடைக்கு முன்னதாக அடங்கல் கொண்டு நெல் கொள்முதல் அலுவலரிடம் பதிவு செய்வது வழக்கம்.
பெரும்பேர்கண்டிகை சுற்றியுள்ள விவசாயிகள் அடங்கல் கொண்டு வந்து பதிவு செய்யும்பொழுது பதிவு செய்யாமல் இழுத்தடிப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். தொடர்ந்து பத்து நாட்களுக்கு மேலாக விவசாயிகள் அலை கழிக்கப்படுவதால் இன்று கொள்முதல் நிலையத்திற்கு வந்த 20 க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களது கண்களில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு அரசு அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். விவசாயிகள் நெல் அறுவடை செய்து கொள்முதல் நிலையத்தில் வைத்துள்ளனர். தற்போது கடந்த 10 நாட்களாக மழை பெய்து வருவதால் நெல்லை பாதுகாக்க முடியாத நிலையில் விவசாயிகள் அல்லல் படுகின்றனர்.
விவசாயிகளின் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யாமல் வியாபாரி நெல் மூட்டைகளை கொள்முதல் செய்வதில் அதிகாரிகள் அதிகம் ஆர்வம் காட்டுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

தொடர்புடைய செய்தி